பரிஸ் நகரம் பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும்

பரிசில் சனிக்கிழமை ஜூலை 14 மற்றும், ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் பரிஸ் நகரம் பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை ஜூலை 12 ஆம் திகதி, பரிஸ் மாநகர காவல்துறையினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகள் பரிசின் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் இடம்பெற உள்ளது. பல நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தர உள்ளனர். அதைத் தொடர்ந்து அப்பகுதி மற்றும் அதனை சூழ உள்ள பகுதி, மற்றும் பரிஸ் முழுவதும் பன்னிரெண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை, உதைப்பந்தாட்ட உலக்கிண்ண போட்டிகளின் இறுதி போட்டியின் நேரலை பரிசின் Champ-de-Mars முற்றத்தில் திரையிடப்பட உள்ளது. இப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஸியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியினை காண 90,000 ரசிகர்கள் கூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நாட்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஆறு அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என காவல்துறை தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.

Sharing is caring!