பரோல் முடிந்தது… மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார் லாலு

ராஞ்சி:
112 நாள் பரோல் முடிந்தது… முடிந்தது… இதனால் இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் லாலு.

கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பீகார் மாஜி முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவரது 112 நாள் பரோல் முடிந்து இன்று ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

கடந்த, 1990ல், பீஹார் மாநிலத்தில், கால்நடை தீவன கொள்முதலுக்காக, மாவட்ட கருவூலங்களில் முறைகேடாக பணம் பெற்று ஊழல் செய்ததாக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், அப்போதைய முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளை, ஜார்க்கண்ட் மாநில சிறப்பு நீதிமன்றம் விசாரித்து லாலு மீதான நான்கு வழக்குகளில், 14 சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள, பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பரோல் பெற்றார். தொடர்ந்து டில்லி எய்ம்ஸ் மற்றும் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவரது 112 நாள் பரோல் முடிந்து இன்று ( 30ம் தேதி) ராஞ்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அப்போது அவர் ஜாமினும் கேட்டார். ஆனால் கோர்ட் ஜாமீனை நிராகரித்து விட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!