பறக்கும் வேகத்தில் ஒரு 18… இது ட்ரெய்ன்ங்க… ட்ரெய்ன்..!

சென்னை:
பறக்கும் வேகத்தில் ஒரு 18… அட இது 160 கி.மீ. வேக ட்ரெய்ன் 18ங்க.

நம் நாட்டில் அதிவேகமாக இயக்கப்படுவது சதாப்தி ரயில் தான். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதை முறியடிக்கும் வகையில் 160 கி.மீ வேக ட்ரெய்ன் 18 அறிமுகமாகிறது.  சென்னை  ஐசிஎப் தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் முதல் சோதனை ஓட்டம் கோட்டா – சவாய் மாதோப்பூர் இடையே நடந்தது. 160 கிலோ மீட்டர் வேகத்தை எளிதில் எட்டும் இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றது. நேற்று 180 கி.மீ வேகத்தை எட்டியது இந்த ட்ரெய்ன் 18.

எந்த விதமான ஆட்டமும் இன்றி இந்த அதிவேக ரயில் பயணித்தது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சதாப்தி ரயில் இயக்கப்படும் தடங்களில் இந்த ட்ரெய்ன் 18 ரயில் ஓடும். டிசம்பர் 25ம் தேதி புது டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே முதல் ஓட்டத்தை தொடங்குகிறது ட்ரெய்ன் 18.

16 கோச்சுகள் உள்ள இந்த ரயிலில் 2 உயர்வகுப்பு பெட்டிகள் உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 52 இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகள் அனைத்தும் 360 டிகிரி சுழலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் கோச்களில் 78 இருக்கைகள் உள்ளன.

வைபை, ஆட்டோமேட்டிக் டோர்ஸ், குறைந்த அளவு நீரை பயன்படுத்தும் உறிஞ்சு கழிவறைகள், ஜி.பி.எஸ் போன்ற சிறப்பம்சங்களும் உண்டு. மெட்ரோ ரயில்கள் போல இதிலும் நின்ற பின்னரே  கதவுகள் திறக்கும். மாற்றுத் திறனாளிகளும் எளிதாக ரயிலில் ஏற வழி செய்யும் வகையில் ஸ்லைடர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!