பறந்த விமானத்தில் புகை… தரையிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக மீட்பு

கோல்கட்டா:
பறந்த விமானத்தில் திடீரென்று புகை கிளம்பியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து, 136 பேருடன் நேற்று இரவு கோல்கட்டா சென்ற இண்டிகோ விமானத்தின் கேபினில் திடீரென புகை கிளம்பியது.

இதையடுத்து கோல்கட்டாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள், அவசர படிக்கட்டு மூலம் உடனடியாக வெளியேறினர். பயணிகளும், ஊழியர்களும் நலமாக உள்ளதாக இண்டிகோ அதிகாரிகள் கூறினர். தீயணைப்பு கருவி மூலம், புகையை கட்டுப்படுத்த முயலும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!