“பறிமுதல் செய்யணும்… அனைத்து சிலைகளையும்…”

சென்னை:
பறிமுதல் செய்யுங்கள்… அனைத்து சிலைகளையும் பறிமுதல் செய்யுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரன்வீர் ஷா வீட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏராளமான பழங்கால சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். அதனை, இந்திய தொல்லியல்துறை முன்னாள் இயக்குநர் நாகசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: ரன்வீர்ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் பல்லவர், சோழர் காலத்து சிலைகள், இவைகளை வெறும் கலைப்பொருட்களாக மட்டும் கருத முடியாது. அனைத்து சிலைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். சிலைகளை வீட்டிலேயே வைக்கக்கூடாது. ஆனால், பதுக்கி வைத்துள்ளது மிகப்பெரிய தவறு. சிலைகள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!