பற்றாக்குறை… சீனா வர்த்தகத்தில் பற்றாக்குறை… இந்தியா கவலை

பெய்ஜிங்:
பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது… ஏற்பட்டுள்ளது என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

சீனாவுடனான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பற்றாக்குறை குறித்து அந்நாட்டிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும், 18.63 சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 84.44 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியது.

இருப்பினும், பற்றாக்குறை 51.75 அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகருக்கு சென்றுள்ள வர்த்தகத்துறை செயலர் அனூப் வதாவன், அந்நாட்டின் வர்த்தகத்துறை இணையமைச்சர் வாங் ஷோவுவென்னை சந்தித்தார்.

அப்போது, இந்தியாவிலிருந்து சோயா பீன், மாதுளை ஏற்றுமதி குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த அவர், வர்த்தக பற்றாக்குறை குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்தார். அப்போது, அரிசி, எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட பொருட்களுக்காக அந்நாட்டின் சந்தையை இந்தியா எட்டுவதற்கான வழியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சீன அமைச்சர் உறுதியளித்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான சந்திப்பின் போதும் வர்த்தக பற்றாக்குறை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உணவு, விவசாய பொருட்கள், ஐடி மற்றும் அதன் சார்ந்த சேவைகள், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் , சீனாவின் சந்தையை இந்தியா அணுக அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!