பலமான கூட்டணி… பாஜ அமைக்கும்… தமிழிசை தகவல்

சென்னை:
பலமான கூட்டணி… பாஜ அமைக்கும் என்று தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தி.மு.க.,வுடன் இன்று இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் வைகோவின் எண்ணம் கனவில் கூட நிறைவேறாது.

கூட்டணியில் வைகோ இருக்கிறாரா என்பதை தி.மு.க.,வில் இருப்பவர்களே உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு பா.ஜ., பலமான கூட்டணி அமைக்கும்; தி.மு.க., கூட்டணி பலமாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!