பலிக்கிறதா!!! பலிக்கிறதா!!! வங்கா பாபாவின் கணிப்புகள் பலிக்கிறதா!

பல்கேரியா:
யாருங்க… வங்கா பாபா… அவர் சொன்னது இப்போது பலிக்கிறது என்று நடுநடுங்கி போய் உள்ளனர் மக்கள்.

12 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன பல்கேரியாவை சேர்ந்த வங்கா பாபாவின் நினைவு தற்போது இந்தோனேசியவை தாக்கிய சுனாமிக்கு பிறகு வந்துள்ளது.

ஆமாங்க. வங்கா பாபா உலகில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கணித்து வைத்து சென்றுவிட்டார். அது இந்தோனேசிய சுனாமி பலரை காவு வாங்கிய பின்னர்தான் வங்கா பாபாவின் கணிப்புகள் பலிக்க துவங்கி விட்டதோ என்ற சிந்தனையும் எழுந்துள்ளது.

வங்கா பாபாவுக்கு 12 வயதிருக்கும் போது புயல் ஒன்றில் சிக்கி பல நாட்களுக்கு பின்னர் கண்களில் மண் மூடிய நிலையில் அவரது குடும்பத்தாரால் கண்டுபிடிக்கப்படார். இதனால் அவர் தன் பார்வையையும் இழந்தார்.

இதற்கு பின்னர்தான் எதிர்காத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணிக்க துவங்கினார். இவர் இறப்பதற்கு முன்னர் ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும். பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பகுதிகள் காணாமல் போகும் என கணித்திருந்தார்.

அதே போல் தற்போது இந்தோனேசிய சுனாமி கடும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரஷ்யா உலகின் அதிபதியாக மாறும் ஐரோப்பா பயனற்று போகும் எனவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!