பல்கலைக்கழக தளமொன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 30 பேர் காயம்

அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் தளமொன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர்.

முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஆரம்பமாகிய போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த 23 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தின்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!