பலியானதாக சொன்ன ஐஎஸ் தலைவன் பேச்சு…இது இறைவன் தந்த சோதனை காலம்

சமீப காலமாக ஐஎஸ் அமைப்பு சந்தித்து வரும் தோல்விகள் இறைவன் இயக்கத்துக்கு அளித்த சோதனை என்று அவ்வமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இறந்துவிட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் அவரது கட்டளையயின்படி சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது. இதனால் அவரது இறப்பு குறித்த தகவல்  உறுதிபடுத்த முடியாததாய் இருந்தது. இந்த நிலையில் சுமார் ஒரு வருடதுக்கு பிறகு ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் பாக்தாதியின் ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. இதை அந்த இயக்கத்தினருக்காக பாக்தாதி வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.

அதில் அவர் பேசுவதாவது, “ஐஎஸ் சமீபத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. கடவுள் நம்மை சோதிக்கும் காலம் தான் இது. இந்தக் காலகட்டத்தை பொறுமையுடன் கையாள வேண்டும். பொறுமையோடு இருந்தால் இறைவன் நிச்சயம் நற்செய்தியை அறிவிப்பார். நமது இயக்கத்தினர் பசியுடனும் அச்சத்துடனும் தற்போது வாழ்கின்றனர். இது கடவுள் வகுக்கும் சோதனைக் காலம்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் சிரியாவில் ராக்கா அருகே ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது போர் விமானங்கள் மூலம் அங்கு சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக ரஷ்யா கூறியுது. அதே போல ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனியும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிலைகுலைந்து போயினர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒலிப்பதிவு வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ பதிவு சுமார் 50 நிமிடங்கள் இருப்பதாக உள்ளது. ஆடியோவின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

Sharing is caring!