பள்ளிகள் இன்று செயல்படும் என்ற அறிவிப்புக்கு மக்கள் எதிர்ப்பு
புதுக்கோட்டை:
இன்று முதல் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் புதுக்கோட்டை, கடலுார், நாகை போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர், மின்சாரம், பஸ் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதி சீரமைப்பு பணி நடந்து வருகின்றன. குடிநீர், மின் வசதியில்லாமல், மோசமான சுவர்களுடன் பள்ளிகள் உள்ளன.
இங்கு சீரமைப்பு பணிகள் நடக்காமல் பள்ளி திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆலங்குடி தாலுகா, வடகாடு, கொத்தமங்கலம், அறந்தாங்கி பகுதிகளில் பஸ் போக்குவரத்து ஆறு நாட்களாக இல்லை.
இதில் பள்ளி திறக்கப்பட்டால் பஸ் பாஸ் வைத்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவர் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S