பள்ளி மாணவர்களுக்கு நிர்வாண தண்டனை… ஆந்திராவில்தான் இந்த கொடுமை

அமராவதி:
தாமதமாக வரும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் நிர்வாண தண்டனை கொடுத்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில், சித்துார் மாவட்டத்தில் உள்ள புங்கனுார் மண்டல் பகுதியில் செயல்பட்டு வரும், சைதன்ய பாரதி என்ற தனியார் பள்ளியில் தாமதமாக வரும் மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.

பள்ளிக்கு தாமதமாக வந்த, 9 – 10 வயதுள்ள மாணவர்கள், மற்ற மாணவர்கள் முன் சமீபத்தில் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘எந்த வகையிலும், இந்த தண்டனையை நியாயப்படுத்த முடியாது. அடுத்த ஆண்டுடன் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!