பழைய இரும்பு கடையில் ஐம்பொன் நந்தி சிலை பறிமுதல்

திருத்தணி:
பழைய இரும்புக்கடையில் இருந்து ஐம்பொன் நந்தி சிலை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி அருகே, பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த, ஐம்பொன் சிலையை போலீசார் நேற்று மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அமிர்தாபுரத்தைச் சேர்ந்தவர், நுார்மா அமீது (32). பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இக்கடையில், ஐம்பொன்னால் ஆன நந்தி சிலை பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருத்தணி டி.எஸ்.பி.,சேகர் தலைமையிலான போலீசார் நுார்மாவின் கடையில் சோதனை நடத்தினர். அப்போது கடையில் பதுக்கி வைத்திருந்த, 1 அடி நீளம், 35 கிலோ எடையுள்ள ஐம்பொன் நந்தி சிலையை மீட்டனர்.

நுார்மா அமீதுவை, டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று, போலீசாரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், பவணந்தியும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நுார்வா அமீது கூறியுள்ளதாவது:

பத்து நாட்களுக்கு முன் என் கடைக்கு காரில் வந்த நான்கு பேர், ‘இந்த நந்தி சிலைக்கான பணத்தை தாருங்கள்’ என்றனர். ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லை’ என்று நான் கூறியதால், ‘இந்த சிலை இங்கேயே இருக்கட்டும்; பிறகு வந்து எடுத்து கொள்கிறோம்’ எனக்கூறி விட்டு சென்றனர். பின், வரவே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!