பவர் பேங்கை தூக்கி எறிந்து உடைத்த பெண்… வெடித்து சிதறியதால் பரபரப்பு

டில்லி:
டில்லி விமான நிலையத்தில் பவர் பேங்கை தூக்கி போட்டு பெண் உடைக்க அது வெடித்து சிதறியதால் பதட்டம் ஏற்பட்டது.

டில்லி விமான நிலையத்தில் சோதனையின் போது பெண் ஒருவர் மொபைல் போனுக்கு உரிய பவர் பேங்க்கை கீழே போட்டு உடைத்தார். அது வெடித்து சிதறியதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த, 28 ம் தேதி காலை 10.35 மணிக்கு டில்லி, டிபன்ஸ் காலனியில் வசிக்கும் மாளவிகா திரிபாதி என்ற பெண் வந்தார். உள்நாட்டு முனையத்திற்கு சென்ற அவர், தர்மசலா செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கான டிக்கெட் வைத்து இருந்தார்.

அவரது லக்கேஜ்களை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது சந்தேகப்படும்படி ஒரு பொருள் இருப்பது போல் தோன்றியது. பையை திறந்து பார்த்த போது, மொபைல் போனுக்கு உரிய பவர் பேங்க் இருந்தது. அதை கைப்பையில் வைத்துக் கொள்ளும்படி, சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், அந்த பெண் கோபம் அடைந்து அந்த பவர் பேங்க்கை, சுவரை நோக்கி வீசினார். சுவரில் பட்டு கீழே விழுந்த பவர் பேங்க் வெடித்து சிதறியது. உடனே சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் கையெறி குண்டு வெடித்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

எனினும், வெடித்தது பவர் பேங்க் தான் என்பது சோதனையில் முடிவு செய்யப்பட்டது. பதட்டத்தை ஏற்படுத்திய அந்த பெண் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!