பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

ஈரோடு:
உத்தரவு… உத்தரவு… பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடப்பள்ளி, அரக்கன்கோட்டடை கால்வாய்களில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரக்கன்கோட்டை வாய்க்காலில் வரும் 12ம் தேதி மற்றும் காளிங்கராயன் வாய்க்காலில் 19ல் நீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் திறப்பால் கோபி, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் 40,230 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். இவ்வாரறு முதல்வர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!