பஸ்சில் பட்டாக்கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு

சென்னை:
பஸ்சில் பட்டாக்கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்களால் பெரும் பரபரப்பு உருவானது.

சென்னை மாநகர பஸ்சில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயணம் செய்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிராட்வே நோக்கி சென்ற பஸ்சில், பயணித்த அவர்கள் கத்திகளை சுழற்றியும், தீட்டியபடியும் பயணித்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், போலீசார் அந்த வீடியோவை ஆய்வு செய்தனர்.

அதில் இச்சம்பவம் தங்கசாலை என்ற இடத்தில் நடந்ததும், மாணவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஒரு மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!