பஸ் ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்

தெலுங்கானா மாநிலம் – கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணித்த பஸ் ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாருக்கும் அம்பியூலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்திருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Sharing is caring!