பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆரிஃப் அல்வி – உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆரிஃப் அல்வி (Arif Alvi ) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் 13 ஆவது ஜனாதிபதியாக டெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் ஆரிஃப் அல்வியை அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஹூசைனின் பதவிக்காலம் எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில், நாட்டின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், ஆரிஃப் அல்வி 212 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!