பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் இலங்கை வருகை

பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற லெப்டினன் ஜெனரல் இக்ராம் உல் ஹக் நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று (02) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை நாட்டில் தங்கும் இக்ராம் உல் ஹக், நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்புப் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரட்ன மற்றும் முப்படைகளின் தளபதிகளை சந்திக்கவுள்ளார்.

இரு நாடுகளினதும் இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

Sharing is caring!