பாகிஸ்தானில் மதத்தலைவர் சுட்டுக் கொலை… பரபரப்பு

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் மதத் தலைவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவரைச் சேர்ந்த மத தலைவர் மவுலானா இஸ்மாயில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். பண்டோ நகர் பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் காயமடைந்த இஸ்மாயிலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!