பாகிஸ்தான் பிரதராகும் இம்ரான் கான்…இந்தியாவுடனான தொடர்பில் திருப்பம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் நவாஸ் ஷெரீப்பின் கட்சியை பின்னுக்கு தள்ளி தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து விரைவில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராகிறார்.

பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் ம. ற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டபேரவைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது.  நேற்றும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, உடனுக்குடன் வாக்குகள் எண்ணப்பட்டது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையிலிருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் முழு வாக்கு நிலவரத்தை அறிவிப்பில் தாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனிடையே, தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது.

தற்போதைய நிலவரப்படி இம்ரான் கானிகட்சி 119 இடங்களிலும் நவாஸின் கட்சி 65 இடங்களிலும் பூட்டோவின் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நவாஸின் கட்சியைவிட இருமடங்குக்கு மேல் பெற்றிருப்பதால் இம்ரான் கான் பிரதமராக போவது உறுதியாகியுள்ளது. ஆனால் தனிப் பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை.

இந்த நிலையில் வெற்றிக் களிப்பில் பிடிஐ தலைவரும் பிரதமராக பதவி ஏற்கவும் உள்ள இம்ரான் கான் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, தனது 22 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைத்திருப்பதாகவும் நாட்டுக்கு சேவை செய்ய தயாராகி இருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜின்னா வேண்டிய பாகிஸ்தான்-ஐ தான் உருவாக்குவதாக பிரதான வாக்குறுதியை இம்ரான் முன்வைத்தார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தொண்டர்கள் இடத்தில் அவர் இந்தியாவுடனான உறவு குறித்து பேசியுள்ளார். இதால் இம்ரான் தலைமையிலான அமையவிருக்கும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் கடைபிடிக்கப் போகும் நிலைப்பாடு குறித்தக் கேள்வி பெரிதளவில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!