பாகுபலி வசனத்தை உல்டா அடித்து பேசிய துணை முதல்வர்

சென்னை
சட்டசபையில் பாகுபலி வசனம் உல்டா செய்து பேசியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று நிறைய முக்கியமான விஷயங்கள் நடந்தது. அதன்படி சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் அதன் மீதான விவாதமும் நடைபெற்றது.

இந்த விவாதத்திற்கு பின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்தும் பேசினார். அதேபோல் சேலம் 8 வழி குறித்தும் பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிநடத்திய கட்சி இது. அவரின் வழியை பின்பற்றித்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். நமக்கு சிலர் துரோகம் செய்துவிட்டனர். நமக்கு துரோகம் செய்தவர்களை, நாமே சூரசம்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டளை படி எதிரிகளை அழிக்க வேண்டும். ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனத்தை உல்டா செய்து பேசி பேச்சை முடித்துக் கொண்டார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!