பாக்.,கில் பயங்கரவாதி சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

பாக்.,கில் கடந்த 13ம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 149 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் நவாஸ் என்பவனை பாக்., பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

காலாட் மாவட்டத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த போது அவனை சுட்டுக் கொன்றதாக கலாட் மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!