பாக்., பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடு… பட்டியலில் சேர்ப்பு… இந்தியா, அமெரிக்கா வரவேற்பு

புதுடில்லி:
வரவேற்பு… வரவேற்பு… இந்தியா, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

சர்வதேச பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு அமைப்பானது, பாகிஸ்தானை பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

பாரிஸ் நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எப்ஏடிஎப் (FATF) என்ற அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்கிறதா என்பதை கண்காணிக்கும் அமைப்பாகும்.

பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்த தவறும் நாடுகள், பிரச்னையின் தீவிரத்திற்கு ஏற்ப பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகள் பட்டியலிலும், கறுப்பு பட்டியலிலும் சேர்க்கப்படுகின்றன. அந்த லிஸ்டில் தற்போது பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், பயங்கரவாதத்தின் சொர்க்கமாகவும் பாக்., இருந்து வருகிறது எனவும், பயங்கரவாத குழுக்கள் பலவற்றிற்கு பாக்., தொடர்ந்து நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்காவும், இந்தியாவும் பல காலமாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் மீதான எப்ஏடிஎப் அமைப்பின் நடவடிக்கைக்கு அமெரிக்காவும், இந்தியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதை இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!