பாக்., பேச்சில் முரண்பாடு… ராணுவ தளபதி குற்றச்சாட்டு

புதுடில்லி:
பாக்., பேச்சில் முரண்பாடு உள்ளது… உள்ளது என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அமைதி குறித்து பாகிஸ்தான் பேச்சில் முரண்பாடு உள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ராணுவத்தில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், போர் நடவடிக்கைகளில் அவர்களை முன்னிலைபடுத்தவில்லை. இதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை என்றே நான் நினைக்கிறேன். மேற்கத்திய நாடுகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

பெரிய நகரங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், ராணுவத்திற்கு வருபவர்கள், பெரிய நகரங்களில் இருந்து மட்டும் வருவது இல்லை. பாகிஸ்தான், இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது. அவர்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டுமானால், மதசார்பற்ற நாடாக அவர்கள் வளர வேண்டும்.

இந்தியா மதசார்பற்ற நாடு. அவர்களும், மதசார்பற்ற நாடாக விரும்பினால், அதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. அமைதிக்காக இந்தியா ஒரு அடி எடுத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்துவைப்போம் என பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், அவர்கள் சொல்வதில் முரண்பாடு உள்ளது.

அந்நாடு நேர்மறையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை இந்தியா உணர வேண்டும். அதுவரை பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது என்ற தெளிவான கொள்கை நம்மிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!