பாக்., மாஜி பிரதமருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை

இஸ்லாமாபாத்:
7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பாக்., மாஜி பிரதமருக்கு.

ஊழல் வழக்கில் பாக்., மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஏற்கனவே அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அவர் மேல்முறையீடு செய்து தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் நவாஸ் மீது நடந்து வந்த பிளாக் ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜீசீயா இரும்பு ஆலை வழக்கு என 2 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பிளாக் ஷிப் முதலீட்டு வழக்கில் அவர் நிரபராதி என்றும் அல்அஜீசியா வழக்கில் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் அவருக்கு 7 ஆண்டு சிறையும், 25 மில்லியன் டாலர் அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவரை ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கக்கூடாது. லாகூர்கோட் லக்பத் சிறைக்கு அனுப்புமாறும் அவரது வக்கீல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பையொட்டி கோர்ட் அருகே அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டிருந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!