பாஜக தலைவர் அமித் ஷாவின் புகைப்படம் பகிரப்பட்டு சர்ச்சை

பாஜக தலைவர் அமித் ஷாவின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

அந்த புகைப்படத்தில், பாஜக தலைவர் ஸ்வஸ்திகா அறிகுறிகளுடன் கூடிய ஒரு சௌகி (ஸ்டூல்) மீது நின்று கொண்டு ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பாஜக தங்களது மிக பெரிய அரசியல் கருவியாக மதத்தை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், பல ட்விட்டர் பயனர்கள் அமித் ஷாவின் இந்த செய்கையால் அவரது மத நம்பிக்கை மீது கேள்வி எழுப்பினர்.

இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் அந்த புகைப்படம் உண்மையானதா அல்லது போலியா என்பது குறித்த சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், அமித் ஷாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் இருப்பதை ஆல்ட் நியூஸ் (Alt News) கண்டறிந்தது. டிசம்பர் 1ம் தேதி ராஜஸ்தானில் உள்ள பலோத்ரா பகுதியில் ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட படமாகும்.

சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதின் எதிரொலியாக, ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!