பாஜவுக்காக பிரசாரம் செய்ய விருப்பம்… வாரிய பதவி தாருங்கள்

லக்னோ:
பாஜவுக்காக பிரசாரம் செய்ய விரும்புகிறேன். வாரிய தலைவர் பதவி கொடுங்கள் என்று ஐ.பி.எஸ். அதிகாரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

உ.பி. மாநில ஐ.பி.எஸ்.அதிகாரி ஒருவர் பா.;ஜ.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய கோரி முதல்வரிடம் கடிதம் வழங்கினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஊர்க்காவல்படை டி.ஜி.பி. சூர்ய குமார் சுக்லா. வரும் 31-ம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடந்த பொது நிகழ்ச்சியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு கைமாறாக சுக்லாவுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க அம்மாநில அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பினார். அதில் நடக்க உள்ள பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். அதற்கு பரிகாரமாக எனக்கு மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற ஏதேனும் ஒருபதவிகளில் என்னை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!