பாஜ ஏஜெண்ட்… கவர்னர் பற்றி சர்ச்சை கருத்து கூறிய முதல்வர்

புதுச்சேரி:
பாஜ ஏஜெண்டாக செயல்படுகிறார் துணை நிலை கவர்னர் என்று சர்ச்சை கருத்தை கூறியுள்ளார் புதுச்சேரி முதல்வர்.

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி பா.ஜ. ஏஜெண்டாக செயல்பட்டு புதுச்சேரி அரசுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்ட வரையறை துணைநிலை கவர்னருக்கு மூன்று நாட்களுக்கு முன் அனுப்பப்பட்டது.
இது தொடர்பான கவர்னரின் கேள்விகளுக்கும் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.

ஆனால் துணைநிலை கவர்னர் கிரண்பேடி உள்நோக்கத்துடன் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளார். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கவர்னரே பொறுப்பு. துணை நிலை கவர்னர் கிரண்பேடி பா.ஜ. ஏஜெண்டாக செயல்பட்டு புதுச்சேரி அரசுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!