பாஜ கூட்டணியில் இருந்து விலகியது பாமக… தனித்து போட்டியா?

சென்னை:
லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் கட்சிகளின் நிலைப்பாடு ஒவ்வொன்றாக தெரிய ஆரம்பித்துள்ளது. அரசியல்வாதிகள் கூட்டணி இப்போது எப்படி என்றே தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் பாமக தற்போது பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜ கூட்டணியில் இருந்த மதிமுக, தேர்தல் முடிந்தவுடனே தனது கூட்டணியை முறித்து கொண்டது. இந்நிலையில் இந்த கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான பாமகவும் தற்போது விலகியுள்ளது.

பாஜ கூட்டணியில் போட்டியிட்டு தான் அன்புமணி எம்பி ஆன நிலையில் தற்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இப்போதைக்கு பாஜ கூட்டணியில் அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் இணைய வாய்ப்பில்லை.

அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருகிறது. இந்த கூட்டணியில் ஏற்கனவே திமுக இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

விசிக இருக்கும் கூட்டணிக்கு பாமக போகாது என்பதால் பாமக வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!