பாஜ சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
குன்னம்:
பாஜ சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேப்பூரில் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குன்னம் சட்டமன்ற அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். வேப்பூர் மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட தலைவர்சாமி இளங் கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்றதொகுதி பொறுப்பாளர் அருள் சிதம்பரம், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் சரவணன், திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.
இதில் மாநில துணைத் தலைவர் ராஜா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நெசவாளர் அணி மாநில தலைவர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, அரியலூர் மாவட்ட தலைவர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி