பாஜ., தான் ஆட்சி அமைக்கும்… முதல்வர் திட்டவட்டம்

சத்தீஸ்கர்:
பாஜ.,தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ரமண் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

மாநில சட்டசபை தேர்தல்களை, மத்திய அரசு மீதான கருத்து கணிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது. எனினும் இப்போது நடக்க உள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்த லோக்சபா தேர்தலில், சிறிது தாக்கத்தை ஏற்படுத்தும்.

சத்தீஸ்கரில், மாநில அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான்காவது முறையாக, பா.ஜ., நிச்சயம் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!