பாடசாலைக்குள் நுழைந்து கத்தி தாக்குதல்: 14 குழந்தைகள் காயம்

சீனாவில் சிறுவர் பாடசாலைக்குள் நுழைந்து கத்தியால் தாக்குதல்: 14 குழந்தைகள் காயம்

சீனாவில் சிறுவர் பாடசாலையில் நுழைந்த பெண் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியின் சோங்கிங் நகரில் உள்ள சிறுவர் பாடசாலையில் இன்று காலை உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சிறுவர்கள் பாடசாலை அறைக்குத் திரும்பினர்.

அப்போது அங்கு நுழைந்த பெண் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் குழந்தைகளை சரமாரியாகத் தாக்கினார்.

இந்த தாக்குதலில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Sharing is caring!