பாடுபடுவோம்… புதிய இந்தியாவை உருவாக்க! இது பிரதமரின் அழைப்பு

புவனேஸ்வர்:
பாடுபடுவோம்… பாடுபடுவோம்… புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறோம் என பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் கோர்தா பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:

கடந்த 3 மாதங்களில் நான் ஒடிசாவுக்கு 2 வது முறை வருகிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்த ஒடிசா மீது தனி அக்கறை கொண்டிருந்தார்.

இந்த நாட்டிற்கு அரும்பெரும் சேவை செய்த வாஜ்பாயை அரசு பலவழிகளில் கவுரவித்து வருகிறது. 100 ரூபாய் நாணயம், அஞ்சல் தலை என வெளியிட்டுள்ளோம். 14 ஆயிரம் கோடி செலவில் ஒடிசாவில் பல்வேறு திட்டங்கள் துவக்கவுள்ளோம்.

புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 35 லட்சம் குடும்பத்தினருக்கு காஸ் இணைப்பு வழங்கியுள்ளோம். ஒடிசாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு 20 சதவீதத்தினரே காஸ் இணைப்பு பெற்றிருந்தனர். தற்போது 70 சதவீதத்தினருக்கும் மேல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.

மீதமுள்ளவர்களும் விரைவில் காஸ் இணைப்பு பெறுவர். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!