பாதிக்கப்பட்டது ஏழைகள்தான்… காங்., தலைவர் ராகுல் காட்டம்

புதுடில்லி:
ஏழைகள் பாதிக்கப்பட்டனர்… பாதிக்கப்பட்டனர்…என்று காங்., தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு மூலம் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவோம் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் அதில் நடந்த முன்னேற்றம் என்ன? மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் பெரும் கோடீஸ்வரர்களிடம் போய் சேர்ந்துள்ளது.

பண மதிப்பிழப்பின் நோக்கம் என்ன? மக்களின் பணத்தை பா.ஜ., கொள்ளையடித்துள்ளது. பண மதிப்பிழப்பு சாதாரண மனிதர்களை பாதித்தது. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட தோல்வியை பிரதமர் மோடி ஒத்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக அவர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக மோடி கூறினார். ஆனால் அதனை செய்தாரா? ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என ஆதாரத்துடன் தான் கூறுகிறேன். ஆனால் அனில் அம்பானி என் மீது வழக்கு போடப்போவதாக கூறுகிறார். அதை சந்திக்க நான் தயார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!