பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 15,000 கோடி ரூபா நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை

கஜ சூறாவளியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 15,000 கோடி ரூபா நிதியுதவி வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜ சூறாவளியின் தாக்கம் தொடர்பில், தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 15,000 கோடி ரூபா நிதியுதவி வழங்குமாறு பிரதமரிடம், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தைத் தாக்கிய கஜ சூறாவளியினால் 46இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக் கணக்கானோர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

நிவாரணப் பணிகளுக்காக முதல்கட்டமாக மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உடனடியாக 1,000 கோடி ரூபாவை தமிழக அரசு விடுவித்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. ​

அதேநேரம், வர்தா, ஒக்கி புயல் நிவாரணத் தொகையில் உள்ள நிலுவையை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sharing is caring!