பாதியில் நிற்கும் ‘அம்மா’ பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம்… விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வெங்கத்துார்:
இப்படி கிடப்பில் போட்டால் எப்படி என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வெங்கத்துாரில் ‘அம்மா’ பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பத்துார், பாப்பரம்பாக்கம், வெங்கத்துார், போளிவாக்கம் ஆகிய பகுதிகளில், ‘அம்மா’ பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கும் பணி, தலா, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிப்ரவரி மாதம் துவங்கியது.

கடம்பத்துார், பாப்பரம்பாக்கம் பகுதியில், 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. முழு அளவில் பணிகள் நிறைவடையாததற்கு, ஒன்றிய நிர்வாகம் நிதி வழங்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், வெங்கத்துார் ஊராட்சியில், ‘அம்மா’ பூங்கா மற்றும் உடற் பயிற்சி கூடாரம் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில்கூட ‘அம்மா’ பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடாரம் பயன்பாட்டிற்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஊராட்சி பகுதியில், ‘அம்மா’
பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடார பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!