பாதுகாப்பாக இருக்கு… ஆதார் விபரங்கள்… மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி:
இருக்கு… பாதுகாப்பாக இருக்கு என்று சொல்லியிக்காங்க… சொல்லியிருக்காங்க.

ஆதார் குறித்த தனிநபர்களின் விபரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாக மத்திய அரசு, ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தில் இதுதொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்து பேசியதாவது:

ஆதாருக்கான பிரத்யேக UIDAI டேட்டாபேஸ் விபரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. ஆதார் விபரங்கள் பாதுகாப்பு தொடர்பாக, மத்திய அரசு போதிய அளவிலான பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

டிராய் சேர்மனின் வங்கி கணக்கில் ஹேக்கர் ஒருவர், ரூ.1 டெபாசிட் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஆதார் மூலமான மக்களுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டத்தின் மூலம் போலிகள் களையப்பட்டு, மத்திய அரசிற்கு ரூ. 90 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!