பாதுகாப்பு நிறைந்த நகரம் சென்னை… போலீஸ் கமிஷனர் பெருமிதம்

சென்னை:
பாதுகாப்பு நிறைந்த நகரமாக சென்னை விளங்குகிறது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிளில், 10,242 ரகசிய கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்த பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:

இந்தியாவிலேயே, பாதுகாப்பு நிறைந்த மாநகரமாக சென்னை விளங்குகிறது. அடைாறு காவல் மாவட்டத்தில், இன்று மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

மேலும் 10 ஆயிரம் கேமராக்கறை நிறுவ மக்கள் உறுதி அளித்துள்ளனர். சென்னை முழுவதும் இதுவரை 1,80,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசு நிதி கொண்டு, பொது இடங்களில் மேலும் ஒரு லட்சம் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!