பானையில் கிடைத்த தங்கப்புதையல்… அரசிடம் ஒப்படைப்பு

ராய்பூர்:
தங்கப்புதையல்… தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சத்தீஷ்ரில் 900 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. சத்தீஷ்கர் மாநிலம் கொண்டகோன் மாவட்டத்தில் சாலைப் பணிகள் துவங்கின. அப்போது 20அடி ஆழத்தில் மண் பானை இருந்துள்ளது. அதை திறந்து பார்த்த போது 57 தங்கம் நாணயங்கள் இருந்துள்ளது.

அப்பகுதி கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பபட்டது. பின்னர் கலெக்டர் நாணயங்களை பெற்றுக்கொண்டார். தொல்லியல் ஆராய்ச்சியில் அந்த நாணயங்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிலபகுதிகளை ஆண்ட யாதவ் வம்சத்தினர் காலத்தைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது. மேலும் புதையல் உள்ளதாக என அப்பகுதி முழுவதும் தோண்டும் பணிகள் நடந்து வருகி்ன்றன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!