பாய்லர் டியூப் பஞ்சர்… மின் உற்பத்தி பாதிப்பு
சென்னை:
பாய்லர் டியூப் பஞ்சர் ஆனதால் 600 மெகா வாட் மின் உற்பத்தி
பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு, தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளிலும்; தலா, 600 மெகாவாட் திறனில், இரு அலகுகளிலும், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின் நிலையம், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிக்கிறது.இந்நிலையில், வடசென்னை மின் நிலையத்தில், 600 மெகாவாட் திறன் உள்ள, ஒரு அலகில், ‘பாய்லர் டியூப் பஞ்சர்’ காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S