பாரிஸில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை பதிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பாரிஸில் நேற்று (14) 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

பாரிஸின் ஏனைய சில பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பொதுவாக அங்கு செப்டம்பர் மாதத்தில் 13 முதல் 22 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் அவ்வப்போது மழையும் பெய்வது வழமை.

எனினும், தற்போது பருவநிலை மாற்றத்தினால் வழமைக்கு மாறான வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!