பார்க்கிங் கட்டணத்திற்காக வாக்குவாதம்… இது சரியா மத்திய அமைச்சரே! கேட்கின்றனர் மக்கள்

புதுடில்லி:
பார்க்கிங் கட்டணம் செலுத்தாமல் வாக்குவாதத்தில் மத்திய அமைச்சருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்த மக்கள் இது சரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

டில்லியில் உள்ள ராஜிவ் சவுக் பகுதியில் மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்பகுதியில் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

இவரது வாகனத்திற்கு கட்டணம் கேட்டபோது, அமைச்சருடன் வந்தவர்கள், காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பார்க்கிங் கட்டணத்தையும் செலுத்த மறுத்து விட்டனர். இது தொடர்பாக டில்லி போலீசாரிடம் கேட்ட போது, யார் தரப்பிலும் புகார் வரவில்லை என தெரிவித்தனர். ஸ்மிருதி இவ்வாறு நடந்து கொண்டது, சமூகவலை தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பார்க்கிங் கட்டணம் ரூ.20 செலுத்த அமைச்சரிடம் பணம் இல்லையாமே! என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பா.ஜ., தரப்பிலும் நாங்கள் தேச விரோதிகள் அல்ல என பதில் தந்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!