பார்லி., வளாகத்தில் போராட்டம் நடத்திய எம்பிக்கள்

புதுடில்லி:
போராட்டம் நடத்தினர் எம்பிக்கள்… எங்கு தெரியுங்களா? பார்லிமென்ட் வளாகத்தில்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். பீஹார் மாநிலம், முசாபர்புரில் உள்ள அரசு காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக்கோரி, மகாத்மா காந்தி சிலை முன்பு தெலுங்குதேச கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். உள்ளும் போராட்டம்… வெளியேயும் போராட்டமா என்று மக்கள் கேட்கின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!