பாலியல் விசாரணைக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடி விட்டாரா நித்தியானந்தா?

பராம்நகர்:
பிடதியில் ஆசிரமம் வைத்துள்ள நித்யானந்தா பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள, ‘கெய்மன்’ தீவுக்கு தப்பியோடியதாக கன்னட சேனல்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து, நித்யானந்தா, நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டம் பிடதியில், நித்யானந்தா ஆசிரமம் உள்ளது.

இங்கு, பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2010ல், நித்யானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் நித்யானந்தா பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது.  ‘விசாரணை முடியும் வரை நித்யானந்தா பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கூடாது’ என, போலீசார் வலியுறுத்தினர். இதை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றதாக தெரிகிறது.

இந்நிலையில் பாலியல் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த, நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில், நித்யானந்தா, அண்டை நாடான, நேபாளத்துக்கு சாலை மார்க்கமாக சென்று அங்கிருந்து சிலரது உதவியுடன், பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள ‘கெய்மன்’ தீவுக்கு தப்பியோடியதாக, கன்னட,’டிவி’ சேனல்களில் நேற்று செய்தி ஒளிபரப்பானது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!