பால் விநியோகம் வழக்கம் போல் நடக்கும்… தடையாகாது…!

சென்னை:
வதந்தி… வதந்தி… பால் விநியோகம் வழக்கம் போல் நடக்கும் என்று அறிவித்து இருக்காங்க.

பால் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளோடு, பால் கிடைக்காது எனவும் வதந்திகள் பரப்பப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு, மக்கள் சேவையில் மனநிறைவோடு பணியாற்றி வரும் லட்சக்கணக்கான பால் முகவர்களின் பணிகள் தங்குதடையின்றி நடைபெற்று, பால் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவையற்ற, உண்மைக்குப் புறம்பான தகவல்களை வதந்திகளாக பரப்புவோர் குறித்த விவரங்களை உடனடியாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், பால் விநியோகம் இருக்காது எனக் கூறி பாலினை அதிக விலைக்கு எவரேனும் விற்பனை செய்வதாக தகவல் தெரிய வந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவிகவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!