பாவம் செய்தது நாங்கள்தான்… அமைச்சர் பேச்சால் சர்ச்சை

மதுரை:
நாங்கள்தான் பாவம் செய்த விட்டோம்… முதல்வர் அந்த பாவத்தை செய்யவில்லை என்று அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோப்பில் கையெழுத்திட்டு நானும், செய்தித்துறை அமைச்சரும் பாவம் செய்துவிட்டோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கருணாநிதி இறந்த போது, மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், கருணாநிதிக்கு இடம் ஒதுக்க சம்மதித்து, அந்த கோப்பில் வருவாய்த்துறை அமைச்சர் என்கிற முறையில் நானும், செய்தித்துறை அமைச்சர் என்ற முறையில் கடம்பூர் ராஜூவும் கையெழுத்திட்டோம்.

அந்த பாவத்தை செய்தது நாங்கள் தான். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த கோப்பில் கையெழுத்திடவில்லை. அந்த பாவத்தை முதல்வர் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!