பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்… ரத்து செய்யப்படும்… போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்:
பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்… ரத்து செய்யப்படும் என்று திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சபரிமலை பிரச்னையை தூண்டும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துக்களை வெளியிட்டால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சபரிமலை பிரச்னையை தூண்டும் வகையில் வன்முறையில் ஈடுபடும்படி கேட்டும் சமூக வலை தளங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால், கருத்துக்களும், ‘ வாய்ஸ் மெசேஜ்’களும் வெளியிடப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுபவர்களின் விவரங்களை சைபர் பிரிவு போலீசார் திரட்டி வருகின்றனர். அவதூறு கருத்துக்களை வெளியிடும் நபர்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்படும், அவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், சபரிமலை பிரச்னை குறித்து அவதூறு தகவல்களை வெளியிடுபவர்களை தடுக்கவே அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அவதூறு கருத்துக்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே, டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையின் அடிப்படையில், பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிரிமினல் வழக்கு. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் அப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!