பிஜி தீவிற்கு அருகில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பிஜி தீவிற்கு அருகில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடான பிஜியில் சுமார் 9 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
லெவுக்கா மற்றும் ஓவாலாவ் தீவுகளுக்கு இடையே பசுபிக் பெருங்கடல் நீர்மட்டத்தில் 559.6 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
இருப்பினும், சுனாமி அபாயம் இல்லையென பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்ததாகவும் லாவ் தீவுக் கூட்டங்களில் அதிகமாக உணரப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S