பிரதமரை சந்தித்து பேசினார் தெலுங்கானா முதல்வர்

புதுடில்லி:
தெலுங்கானா முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக பிரதமரை சந்தித்துள்ளார் சந்திரசேகர ராவ்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி தேசிய அளவில், காங்., – பா.ஜ., அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில், சந்திரசேகர ராவ் ஈடுபட்டு உள்ளார்.

இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினார். இந்நிலையில் நேற்று டில்லியில் பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.

தெலுங்கானா முதல்வராக பதவியேற்ற பின்னர், பிரதமரை அவர் சந்திப்பது முதல்முறையாகும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!